கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் கல்வி சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. குறிப்பாக அதிபர் நியமனங்களில் அதிகளவில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன.

பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வு இடம்பெறும். ஆனால் கிழக்கில் அவ்வாறு இடம்பெறுவதில்லை.

தனிப்பட்ட விருப்பங்களுக்கேற்ப அதிபர் நியமனங்கள் இடம்பெறகின்றன. அரசியல் கட்சி ரீதியில் பாடசாலைகளில் அதிபர் நியமனங்கள் இடம்பெறுகின்றன.

இதன்காரணமாக தகுதியுடைய அதிபர்கள் உரிய முறையில் பதவியில் அமர்த்தப்படுவதில்லை.

தற்போது நாடு முழுவதும் அதிபர் சேவை தரம் 3 நியமனங்கள் 4672 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் கிழக்கு மாகாணத்தில் 487 பேருக்கும், வட மாகாணத்தில் 259 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்கள் வழங்ப்படுவதிலும் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன.

இலங்கை ஆசிரியர் சங்கம் என்கின்ற வகையில் இச்செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். உடனடியாக இச்செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு தகுதியுடையவர்கள் பதவியில் அமர்த்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin