இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் இயங்கும் சில பாடசாலைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்கள் தரகர்கள் மூலமாக இந்த பிள்ளைகளின் கைகளுக்கு செல்கின்றன. சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் என்பனவும் மாணவர்களின் கைகளுக்கு கிடைத்து வருகிறது.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரை பாவனை மற்றும் செல்போன்களில் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
பாடசாலைகள் மாணவிகளில் சிலர், போதை மாத்திரைகளை விலைக்கு வாங்குவதற்காக தமது உடலை தொட அனுமதித்து பணத்தை பெற்றுக்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இதனிடையே பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவரை கைது செய்து, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.