எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு யாராவது தன்னை அழைத்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்க போவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தென் இலங்கையின் பிரதான சங்க நாயக்கர், கலாநிதி ஓமல்பே சோபித தேரரை எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ விகாரைக்கு சென்று சந்தித்த பின்னர்,செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படுவேன்.எவராவது சிறந்த யோசனையை முன்வைத்தால், எதிர்கால அரசியலுக்காக அது குறித்து ஆராய்ந்து பார்ப்பேன்.பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் சார்பில் ஊழலுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுவேன் எனவும் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.
அதேவேளை இந்த நாடு அழிவை சந்திக்க காரணமான மொட்டுக்கட்சியுடன் இணைந்து கடந்த காலத்தில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் பொறுப்புக்கூறவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் அதில் இருந்து மீண்டு வெளியில் வந்திருப்பது சிறந்த விடயம்.ரொஷான் ரணசிங்க, எதிர்காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகளுடன் கூடிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் சோபித தேரர் கூறியுள்ளார்.