இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள்

நாட்டில் நிலவும் சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘பொன்னி சம்பா’ அரிசி மாதிரிகளில் கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

தற்போது, பெரிய அளவிலான அரிசி வியாபாரிகள் கீரி சம்பா இருப்புக்களை மறைத்து வைத்துள்ளதால், சந்தையில் கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதன்காரணமாக கீரி சம்பாவுக்கு பதிலாக 3 இலட்சம் மெற்றிக் டன் பொன்னி சம்பாவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் அமைச்சரவையிடம் அனுமதி கோரினார்.

ஆனால் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு 50இ000 மெற்றிக் டன் ஆக இருக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன்படி 50,000 மெற்றிக் டன் பொன்னி சம்பாவை மட்டுமே இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்த பொன்னி சம்பா பங்கு அரசு நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட இருந்தது. ஆனால் உரிய இறக்குமதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அரிசியின் ஆறு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் ஐந்து மாதிரிகளில் கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக பொன்னி சம்பா அரிசியை வேறு ஒரு நிறுவனம் ஊடாக இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin