நாட்டில் பால் பண்ணைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து பால் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில், 90,592 கால்நடை பண்ணைகள் காணப்படுகின்ற போதிலும், 58,137 பண்ணைகள் மாத்திரமே கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பெரும்பாலானவை நாளொன்றுக்கு 100 லீட்டருக்கும் குறைவான பால் பெரும் பண்ணைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பதிவு செய்யப்படாத பண்ணையாளர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்களை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.
இந்த பின்னணியில், அடுத்த மாதத்தை கால்நடை பண்ணை பதிவு மாதமாக அறிவிப்பதற்கு விவசாய அமைச்சகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.