அடுத்த ஆண்டு முதல் முச்சக்கர வண்டி கட்டணம் பாரியளவில் அதிகரிக்கும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 150 ரூபாவிற்கு மேல் அதிகரிக்குமென அவர் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் வற் வரி 18 வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி எரிபொருளுக்கும் வற் வரி விதிக்கப்படும் எனவும், இதில் பெற்றோல், டீசல் விலை சடுதியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது, முதல் கிலோமீட்டருக்கான முச்சக்கரவண்டிக் கட்டணம் சுமார் 100 ரூபாவாக உள்ளது.
இந்த கட்டணம் எதிரவரும் நாட்களில் 150 ரூபாவிற்கும் மேல் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.