ஆசிய நாடுகளின் நகரங்களில் வெளிநாட்டவர்கள் குடும்பத்துடன் வசிக்கவும் தொழில் புரியவும் சிறந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெர்சர் என்ற நிறுவனம் நடத்திய வெளிநாட்டினருக்கான வாழ்க்கைத்தரம் 2023 எனும் கருத்து கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
சர்வதேச ரீதியில் சிங்கப்பூர் 29 ஆம் இடத்தில் உள்ளதுடன் அந்த இடத்தை அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகருடன் சிங்கப்பபூர் பகிர்ந்துக்கொண்டுள்ளது.
கருத்துக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட 241 நகரங்கள் அடங்கிய பட்டியலில் ஹொங்கொங் 77வது இடத்தை நோக்கி பின்தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் 450க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலவும் வாழ்க்கைச்சூழல்களை மெர்சர் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.அரசியல், சமூகச் சூழல், சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, வீட்டுவசதி உள்ளிட்ட 39 அம்சங்களின் அடிப்படையில் இந்தக் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், அந்த நிறுவனம் இந்தப் பட்டியலை கொவிட்-19 தொற்றுக்கு முந்தைய காலகட்டமான 2019ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது.
அந்த ஆண்டிலும் சிங்கப்பூர் ஆசியாவில் முதலிடத்தில் இருந்ததுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த இடத்தை தக்கவைத்துள்ளது.
பட்டியலின் அடிப்படையில் சர்வதேச ரீதியில் ஒஸ்ரியாவின் வியன்னா நகரம் முதலிடத்திலும் சுவிஸர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஒக்லாந்து ஆகியவை இரண்டாம் இடத்திலும் உள்ளன