மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

கொரோனா காலத்தில் உயிரிழந்த குடும்பங்களிடம் பிரித்தானிய பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியிருக்கிறார்.

பெருந்தொற்று காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

2020 முதல் 2021 வரை தொற்றுநோய்களை சமாளித்தது தொடர்பான அரசின் நடவடிக்கைகள் பற்றியும், போரிஸ் ஜான்சனின் நிர்வாகத்தின் திறமையின்மை குறித்தும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில் நாட்டின் தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் நேற்று ஆஜராகி விளக்கமளித்தாா்.

அப்போது அவர் பேசும் போது, “கொரோனா பேரிடா் காலத்தில் அரசு எடுத்த கடுமையான முடிவுகளால் பாதிக்கப்பட்டவா்களிடமும், சொந்தங்களை இழந்த குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருகிறேன்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போரீஸ் ஜான்சன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.

பெருந்தொற்று காலக்கட்டத்தில் இருந்து பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொண்டுள்ளோம்.

அது வருங்காலத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும்” என்று பேசினார்.

கொரோனா சமயத்தில் ரிஷி சுனக் பிரித்தானியாவின் நிதியமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin