இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 18,200 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இத்தாக்குதலில் 104 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்கள் காஸாவின் தென் பகுதியில் அடைக்கலம் தேடுமாறு இஸ்ரேல் தெரிவித்துள்ளதோடு, காஸா முழுவதும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
காஸாவை நிரந்தரமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கலான்ட் கூறியிருக்கிறார்.
“குறித்த வட்டாரம் யாரின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பது பற்றிப் பேச இஸ்ரேல் தயார் என்றும், ஆனால் காஸாவை நிர்வகிக்கும் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றாக இருக்கக்கூடாது.
ஹமாஸைத் துடைத்தொழிக்க இன்னும் நெடுங்காலத்துக்குப் போரிடத் தயாராக உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பை உறுதிசெய்ய லெபனான் கிளர்ச்சிக் குழுவான ஹிஸ்புல்லாவுடன் (Hezbollah) ஒப்பந்தம் செய்துகொள்ளவும் இஸ்ரேல் தயார்“ என்று தற்காப்பு அமைச்சர் கலான்ட் தெரிவித்தார்.