சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவால் வர்த்தகர்கள் உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலை இன்றைய தினம் 250 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
நாட்டில் பிரதான அரிசி விற்பனை நிறுவனமொன்று சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலையை 260 ரூபாவாக உயர்த்தியுள்ளதுடன், மற்றுமொரு நிறுவனம் கிலோ ஒன்றின் விலையை 245 ரூபாவாக உயர்த்தியுள்ளது.
இதனால் பண்டிகை காலத்துக்குள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 300 ரூபாவை உயருமென நுகர்வோர் அச்சம் வௌயிட்டுள்ளனர்.
இதேவேளை, தொடர்ந்து பிரதான அரிசி விற்பனை நிறுவனங்கள் சம்பா அரிசியின் விலையை உயர்த்திவந்தால் இந்தியாவில் இருந்து சம்பா அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் கூறியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.