இலங்கையில் உள்ள குழந்தைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் உள்ள குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.

இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏனைய தெற்காசிய நாடுகளும் இதேபோன்ற பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வற்கு வெளிநாட்டு நாணயம் இல்லாமல் போனதை அடுத்து, இலங்கை வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்தநிலையில் வழக்கமான உணவைத் தவிர்க்கும் குடும்பங்களால் இந்த நெருக்கடி கடுமையாக உணரப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் (யுனிசெஃப்) தெற்காசிய இயக்குனர் ஜோர்ஜ் லாரியா-அட்ஜெய் கூறியுள்ளார்.

அதன்படி சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor