மக்களை கொல்லும் வரவு-செலவுத் திட்டம்

பெறுமதி சேர் வரி உள்ளிட்டு அனைத்து விடயங்கள் ஊடாகவும் நாட்டு மக்களை கொலை செய்வதற்குரிய வேலைத்திட்டங்களே அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில், பாராளுமன்றத்தில் இன்று (11) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த திட்டங்களின்போது விசேடமாக இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களே விசேடமாக உயிரிழந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தொடர்ந்து கருத்துரைக்கையில்;

முதலாவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் போது மக்களை கொன்று அந்த இரத்த கரையூடாக பெறப்பட்ட பலத்தில் மூலம் இந்த அரசாங்கம் ஆட்சியமைத்தது.

அடுத்ததாக கொவிட் ஊடாக இந்த நாட்டு மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதுமாத்திரமல்ல எரிவாயுவை வெடிக்கவைத்து மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று மக்கள் உயிரிழந்தனர்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்களை கொன்றனர்.

ஆனால் இன்று வெட் சுமையை அனைத்து மக்களின் தலையிலும் சுமத்தி அதன் மூலம் மக்களை கொள்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களை கொல்லும் ஒவ்வொரு வேலைத்திட்டத்தின் போதும் நீங்கள் கைகளைத்தட்டி ஆரவாரமிட்டு எங்களுக்கு சேறுபூசும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளீர்கள்.

இந்த வரவு-செலவுத்திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது சேறுபூசும் நடவடிக்கையே முழுமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும் இந்த நாட்டுக்காக புதிய முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை. இந்த நாட்டு மக்களின் உரிமைகள் தொடர்பில் எந்தவொரு நபரும் கருத்துக்களை முன்வைக்கவில்லை.

ஆனால், நாட்டு மக்களுக்காக கருத்துக்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித்தலைவர் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் சேறுபூசுவதற்கு மாத்திரமே இந்த சபையில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இருந்தது” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin