தெற்கு சுவிட்ஸர்லாந்தின் சியோனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடியுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளில் துப்பாக்கித்தாரி உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் அல்லது நோக்கம் இதுவரையில் தெரியவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
தனிநபர் அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இதன்படி, 2.3 மில்லியன் துப்பாக்கிகள் பொது மக்களிடம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் 2001 ஆம் ஆண்டு முதல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.