இந்தியாவை பாதுகாத்தால் இலங்கையின் பாதுகாப்பு பாதுகாக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், “இந்தியா பாதுகாக்கப்படும்போது இலங்கையும், இலங்கை பாதுகாக்கப்படும்போது இந்தியாவும் பாதுகாக்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய – இலங்கை உறவு தொடர்பில் இந்தியாவின் தலைமை மிகவும் தெளிவாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிற்கு சீனக் கப்பல்களின் வருகை குறித்த இந்தியாவின் கவலைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
இந்தியாவும் இலங்கையும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. கப்பல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பொதுவான பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். “பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் இருக்கும்போது செழிப்பும் அமைதியும் இருக்க முடியும்.
பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது இருதரப்பின் பொறுப்பாகும். இந்தியாவை பாதுகாத்தால் இலங்கையின் பாதுகாப்பு பாதுகாக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்தியா பாதுகாக்கப்படும்போது இலங்கையும், இலங்கை பாதுகாக்கப்படும்போது இந்தியாவும் பாதுகாக்கப்படும்” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, விரைவில் அது முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2047இல், இந்தியா 30 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு வைத்துள்ளது.
இந்தியாவின் தலைமையானது இலங்கையுடன் வலுவான பிணைப்புக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதால், இலங்கை அதன் செழுமையின் முக்கிய பயனாளியாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.