அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் உக்ரைனின் எரிசக்தி தேவைகள் குறித்தும், அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நடந்து வரும் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் “அசைக்க முடியாத அர்ப்பணிப்பை” நிரூபிக்க ஜோ பைடன், ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.