மிஹிந்தலை விகாரைக்கு இனி பாதுகாப்பு இல்லை

மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவம், கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் 251 பேரை மீள பெற்றுக்கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகளால் தமது உயிருக்கு அச்சுத்தல் இருப்பதாக விகாராதிபதி வளவ ஹெங்குனாவேவே தம்மரதன தேரர், அண்மையில் கூறியிருந்தார்.

இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இன்று பதில் அளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்,

படையினரின் இருப்பு அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என மாநாயக்க தேரர் கருதுவதால் வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையின் பாதுகாப்புப் பணியாளர்களை விலக்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவில் உடையில் அங்கிருந்த இரண்டு நபர்களும் இராணுவ வீரர்களாகும்.

விகாரையின் பாதுகாப்பையும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவே அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர்.

என்றாலும், விகாரையின் வளாகத்தில் இருக்கும் இராணுவ வீரர்களின் இருப்பு அச்சுறுத்தலாக கருதப்படுவதால் அவர்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.” என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin