சீனாவில் சுவாச நோய் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் சுவாச நோய் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் வைத்தியசாலைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் முதற்கட்டடாக வார நாட்களில் சீனாவில் வைத்தியசாலைகள் கூடங்களை அமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றன.
வூஹான் நகரின் சிறுவர் வைத்தியசாலைகள் கூடுதல் நேரம் இயங்குகிறது. அதேபோல் குறித்த பகுதிகளில் மருந்தகங்கள் காலை 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படுகிறது.
மேலும், அந்த வைத்தியசாலையில் பிற்பகல், இரவு வேளைகளில் இயங்கும் மருந்தகங்களும் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதல் எண்ணிக்கையில் வரும் நோயாளிகளைக் கவனிப்பது அந்நடவடிக்கையின் நோக்கம்.
இதேவேளை, நிங்ஸியா ஹுய்உள்ள யின்சுவான் மகப்பேறு, சிறுவர் வைத்தியசாலைகளில் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மருத்துவ உதவி நாடிவந்த சிறுவர்களின் எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்காகும்.
சீனாவில் தற்போதைக்கான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு சுவாச நோய்க்கு ஆளாகமல் தவிர்ப்பதற்கான முயற்சிகள், குளிர்காலத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.