அமெரிக்காவில் சீனத் தூதுவராக கடமையாற்றிய நிலையில் உடனடியாக மிக உயர்ந்த பதவியைப் பெற்று, சீனாவின் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய Qin Gang எங்கு இருக்கின்றார் என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அவர் இறுதியாக கடந்த ஜூன் மாதம் ஊடகங்களில் காணப்பட்டார். தற்போது அவர் உயிருடன் இல்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சில ஊடகங்களில் Qin Gang தற்கொலை செய்து கொண்டார் எனவும், அவர் சீன அரசால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனவும் பல்வேறு செய்திகள் வெளியாகின.
ஜூன் மாதம் இறுதியாக காணப்பட்ட Qin Gang அதன் பின்னர் காணாமல் போன சம்பவம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜூலை மாதம் பெய்ஜிங்கில் உள்ள இராணுவ வைத்தியசாலையில், அவர் உயிரிழந்து விட்டதாக சீன அரசாங்கத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் கூறியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் சீனத் தூதராக இருந்த காலத்தில் Qin Gang கொண்டிருந்த திருமணத்திற்குப் புறம்பான உறவுவே அவர் காணாமல் போனமைக்கான உண்மையான காரணம் என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஏற்கனவே கூறியிருந்தது.
விவகாரம் தொடர்பாக சீன அரசு மேற்கொண்ட விசாரணைக்கு அவர் ஒத்துழைத்துள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற சீன அதிகாரியான பீனிக்ஸ் தொலைக்காட்சியின் செய்தியாளரான ஃபூ சியாவோயன் என்ற பெண்ணுடன் Qin Gang, கொண்டிருந்த திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆபத்தில் சிக்கியிருப்பதாக சீன அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.
Qin Gang,வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தார். தற்போது தாய் மற்றும் குழந்தை இருக்கும் இடமும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
Qin Gangன் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட சீன ஜனாதிபதி Xi Jinping, ஜூன் மாதம் அவரை சீன வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கினார்.
அவருக்குப் பதிலாக, முன்னாள் இராஜதந்திரி வாங் யீ வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்திருந்தது.