பறவைக் காய்ச்சல் தொடர்பில் பிரான்ஸ் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் என பொதுவாக அறியப்படும் Avian influenza, கடந்த ஆண்டுகளில் உலகம் முழுவதுக்கும் மில்லியன் கணக்கான பறவைகளை அளிப்பதற்கு வலிவகித்தது.

இந்தக் காய்ச்சலானது பொதுவாக குளிர் காலத்தில் பறவைகளை தாக்குகிறது.

இதன்படி, Avian influenza பறவை காய்ச்சலானது ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரங்களில் பரவியுள்ளது.

இந்த நிலையில், வடக்கு பிரான்ஸில் வான்கோழிகளிடையே பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரையான காலப்பகுதி மிகவும் ஆபத்தான காலகட்டமென பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து கோழிகளையும் பண்ணைக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் நோய் பரவுவதை தவிர்ப்பதற்கு மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேடணுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் காரணமாக உணவில் பாதிப்பில்லை என்கின்றபோதும், தொழிற்துறை பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சலை எதிர்கொள்வதற்கு பிரான்ஸ் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகிறது.

முன்னதாக பறவைக் காய்ச்சல் வாத்துகளிடையே மாத்திரம் பரவிவந்த நிலையில், வாத்துகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

அறிகுறிகள் இன்றி பரவும் இந்தக் காய்ச்சல் தற்போது பறவைகளிடத்திலும் பரவத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பறவைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பயனளிக்குமா என்பது குறித்து அறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin