நாட்டின் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை தேடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் சீன ஆய்வு கப்பலை நிறுத்துவதற்கும் ஆய்வுகளை நடவத்துவதற்கும் அனுமதி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட புவிசார் அரசியல் கவலைகள் மற்றும் கேள்விகளைத் தொடர்ந்து இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 14 மாதங்களுக்கு இரண்டு ஆய்வு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மற்றுமொரு ஆய்வு கப்பலுக்கான அனுமதியை சீனா இலங்கையிடம் கோரியுள்ளது.
இதனிடையே, உளவுபார்க்கும் சாத்தியக்கூறுகளை மேற்கோள் காட்டி முந்தைய இரண்டு ஆய்வு கப்பல்கள் குறித்தும் இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தை அதன் முக்கிய இடமாற்ற மையமாக இந்தியா பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மூன்றாவது கப்பலுக்கு இலங்கை இதுவரை அனுமதி வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.