சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பெரும் பொருளாதார சரிவை உலகம் கண்டது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன.
ஒரு வாரத்தில் 32 ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும்.
இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.