நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வடக்கு, கிழக்கில் பௌத்த புராதன சின்னங்கள் வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன.
எனவே, வடக்கு, கிழக்கு பிரிந்தால் நிலைமை என்னவாகும்.” – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருட்கள், புராதன சின்னங்கள் வேகமாக அழிக்கப்படுகின்றன.
குருந்தூர் மலை விவகாரம் இதற்கு சிறந்த சான்று, நெடுங்கேணியில் இருந்த பௌத்த சின்னம் அகற்றப்பட்டு வேறொரு சிலை அங்கு வைக்கப்பட்டதை நான் கண்டேன்.
இந்நிலைமையில் வடக்கு, கிழக்கு பிரிந்தாலோ, தனி நாடு உருவாகினாலோ என்ன நடக்கும்? எனவே ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம்” எனத் தெரிவித்தார்.