இராணுவத்தினரின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு

இராணுவத்தினருக்கு உணவு வழங்கும் சப்ளையர்களின் நிலுவை பில்கள் கொடுப்பனவு தொடர்பில் 16.5 பில்லியன் ரூபா செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேலதிக மதிப்பீட்டிற்கு அரசாங்கத்தின் நிதிக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இராணுவத்தினருக்கு சரியான அளவு கலோரி உணவுகளை வழங்க முடியாவிட்டால், ஒரு நாடு தோல்வியடையும் என்பதால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுவதன் மூலம் குழு உரிய ஒப்புதலை வழங்கியதாக பாராளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் செலவிடப்படும் தொகையுடன் ஒப்பிடும் போது முறையான போஷாக்கான உணவுகள் பெறப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட வேண்டுமென குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

ஒரு இராணுவ வீரருக்கு நாளொன்றுக்கு 3,400 கிலோகலோரி உணவு வழங்கப்பட வேண்டிய போதிலும், தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு அது சவாலாக மாறியுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை இராணுவ வீரர்களின் மன உறுதியையும் உடல் தகுதியையும் பாதிக்கிறது என்றும், 2021 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 30,000 பேர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin