வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் நாட்டுக்கு வந்தடையும்.
“எனினும், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில், திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளால் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன” என்றார்.