இலங்கையிலுள்ள முழு பெண் சமூகத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வலுவூட்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தேசிய பொருளாதாரத்தில் முன்னணி பங்கேற்பாளர்களாக மாற்றும் நோக்கில் சுஹுருலிய அல்லது புதுமைப்பெண் 2.0 உத்தியின் அறிமுகம் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இல்லத்தரசி முதல் அலுவலகம், பணியிடம், பண்ணை என அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஏழு முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், அடுத்த மூன்று வருடங்களின் இறுதிக்குள் அந்த இலக்குகளை அடைய எதிர்பார்த்துள்ளதாகவும், 2030 தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாய திட்டத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
புதுமைப்பெண் 2.0 மூலோபாயத் திட்டம், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் திரு கனக ஹேரத் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க ஆகியோரிடமும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பத்தாயிரம் பெண் தொழில்முனைவோரை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தி, அவர்களை டிஜிட்டல் தொழில்முனைவோராக சர்வதேச சந்தைக்கு அணுகச் செய்தல், 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டின் ஐம்பது சதவீத பெண்களை தேசிய பொருளாதாரத்தில் செயலில் பங்களிப்பவர்களாக மாற்றுதல், 2026 ஆம் ஆண்டளவில் STEM கல்வியில் பெண்களின் கலவையை நாற்பது சதவீதமாக உயர்த்துதல், ICT பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை நாற்பத்தைந்து சதவீதமாக உயர்த்துதல், புதிய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு பொதுத்துறையில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சிறப்புத் தேவைகள் உள்ள பெண்கள், இந்த மூலோபாயத் திட்டமானது டிஜிட்டல் பொருளாதாரத்தின் பலன்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் செல்லும் பெண்கள் மற்றும் ICT பட்டம் அல்லாத பட்டதாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது, சைபர்ஸ்பேஸில் (cyber space) பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தகவல் பகிர்வு பற்றிய அறிவு மற்றும் பயிற்சி அளிப்பது ஆகியவை அடங்கும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் திரு கனக ஹேரத், DIGIECON 2030 வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்காக டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய விடயங்களான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் சமூகத்தை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, புதுமைப்பெண் மூலோபாய 2.0 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையானது கிராம மட்டத்தில் இருந்து நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு வேலைத்திட்டம் எனவும், நாட்டில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனைப் பின்பற்றுவது மிகவும் அவசியமானது புதுமைப்பெண் திட்டத்தை நாடு முழுவதும் பரவலாக பரப்ப வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் அழுவல்கள் இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க, ஒரு நாட்டைப் போன்று உலகளாவிய ரீதியில் நிலவும் சவால்களை வெற்றிகொள்வதற்கு, பெண்கள் சமூகம் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்று, அவர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் எனவும் அவர்கள் சொந்தமாக மற்றும் நாட்டின் பொருளாதாரம் பலம் கொடுக்க, தனது அமைச்சு இதுவரை வழங்கிய ஆதரவை தொடர்ந்தும் வழங்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் மலிக் ரணசிங்க உரையாற்றுகையில், நாட்டின் சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதமானவர்கள் உயர் கல்வி கற்கும் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும், அவர்கள் வேலை வாய்ப்பில் குறைந்த சதவீதத்தையே பெறுகின்றனர்.
தகவல் தொழிநுட்ப அறிவு இல்லாததும் ஒரு காரணம் என்றும், இலவசக் கல்வி கற்ற பின் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்நாடுகள் பலன் அடைகின்றன என்றும் கூறிய பேராசிரியர், வெளிநாடுகளில் கடன் வாங்கும்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். புதுமைப்பெண் 2.0 மூலோபாயத் திட்டமானது, தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பெண் சமூகத்தை வலுவூட்டுவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தில் தீவிரமாக பங்குபற்றுவதற்குமான நடைமுறை வேலைத்திட்டத்தை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி திரு.சமீர ஜயவர்தன உரையாற்றுகையில் புதுமைப்பெண்னின் முதல் கட்டம் அதன் நடைமுறைத்தன்மை காரணமாக பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து முன்னேறியதாக இங்கு குறிப்பிட்டார்.
புதுமைப்பெண் 2.0 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஒவ்வொரு துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் ஆதரவு கிடைத்ததாகவும், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இதுபோன்ற ஒன்றைத் தொடங்குவது கடினமான பணி என்றும், எதிர்காலத்தில் மீண்டும் உருவாகாமல் இருக்கலாம், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இலங்கைப் பெண்களை எவ்வாறு வலுப்படுத்துவது?” என்ற தலைப்பில் இங்கு விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
புதுமைப்பெண் 2.0 மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கு அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள் உட்பட 59 நிறுவனங்கள் பங்களித்துள்ளதுடன், அதற்காக 8 மாதங்கள் எடுத்துள்ளன.
தொழில்நுட்ப அமைச்சகம், மகளிர், சிறுவர் அழுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சகம், கல்வி அமைச்சகம், மெட்டா (meta) நிறுவனம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசிபிக் பயிற்சி மையம் உள்ளிட்ட பல அமைப்புகள் புதுமைப்பெண் திட்டத்தை தொடர ஆதரவு அளித்துள்ளன.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா, பிரதமர் செயலகத்தின் மேலதிக செயலாளர் தீபா லியனகே, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வருண ஸ்ரீ தனபால, அமைச்சின் மேலதிக செயலாளர் தொழில்நுட்பம் ஏ. கே. ஆர். அலவத்த, இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் சம்பா உபசேன, மகளிர், சிறுவர் அழுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சகத்தின் இயக்குநர் கே. பி. சி. சுபாஷினி, FITIS நிறுவனத்தின் தலைவர் இந்திக்க டி சொய்சா, இலங்கை கணினி சங்கத்தின் தலைவர் கலாநிதி அஜந்த அத்துகோரள, SLASSCOM நிறுவனத்தின் உப தலைவர் ஷெஹானி செனவிரத்ன, பிரித்தானிய கணினி சங்கத்தின் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவர் வஜிந்திர கந்தேகமகே, தொழில் வல்லுநர்கள், கைத்தொழில்துறையினர், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
https://www.icta.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் புதுமைப்பெண் 2.0 உத்தி பற்றி மேலும் அறியலாம்.