வடகொரிய பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தடுக்க, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பெண்களிடம் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற 05வது தேசிய தாய்மார்கள் மாநாட்டில் அழுதுகொண்டே வடகொரிய தலைவர் இவ்வாறு கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வட கொரியா, சமீபத்திய தசாப்தங்களில் கொடிய பஞ்சங்கள் உட்பட கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.