வெளிநாட்டில் இருந்து வந்த பொதிகளில் ரூ.43 மில். பெறுமதியான போதைப்பொருள்!

ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் சுமார் 43 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொதைப்பொருள் இருந்தமையைக் கண்டு, இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால், விசாரணைகளில் அந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளன.

இதையும் படிங்க : வீடுகளுக்கு “Door to Door” பொருட்கள் விநியோக முறை இலங்கையில் இடைநிறுத்தம்!

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 25 பொதிகளை ஆய்வு செய்த போது, அங்கு 2193 Ecstasy என்ற Methamphetamine மாத்திரைகளும், 1740 கிராம் குஷ் மருந்தும், 29 கிராம் Amphetamine போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் தற்போது ஒப்படைக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin