பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடியை அம்பலப்படுத்திய எம்.பி!

வெளிநாடு செல்வதாகக் கூறி, விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் இலங்கையிலேயே வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக வாரியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் – 80, பேராதனையில் – 41, ஜயவர்தனபுர – 35, களனி – 54, திறந்த பல்கலைக்கழகத்தில் – 17, ருஹுணு பல்கலைக்கழகத்தில் – 81 என 80 பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏழு வருட விடுமுறை எடுத்துள்ளதாக எம்.பி சுட்டிக்காட்டினார்.

ஏழு வருடங்களுக்கு விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90 சதவீதமானோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

2020-2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிநாடு செல்வதாகக் கூறி விடுமுறை எடுத்தவர்களில் 7 பேரே வெளிநாடுகளில் உள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: admin