வாட்ஸ் அப் பயனர்களுக்கான செய்தி!

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோருக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக புதிய ஃபில்டர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவிருக்கும் புதிய அப்டேட்டில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பட்டியல் பார்வையில் பார்க்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

வாட்ஸ் அப் கொண்டுவர இருக்கும் அப்டேட் மூலம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை ஃபில்டர் செய்து பார்க்கும் வசதியும் லிஸ்ட் வியூ முறையில் ஸ்டேட்டஸ்களைப் பார்க்கவும் முடியும் என்று WABetaInfo தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு தற்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டது.

இந்த அம்சத்தைப் பெற பயனர்கள் 2.23.24.11 வெர்ஷன் வாட்ஸ் அப் செயலி இருக்க வேண்டும். எந்த சேனல்களையும் பின்தொடராத பயனர்களுக்கு இந்த லிஸ்ட் வியூ அம்சம் சாதகமானது.

இதன்மூலம் அவர்கள் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை எளிதாகப் பார்க்க முடியும். ஃபில்டர் ஒப்ஷனில் All, Recent, Viewed, Muted என நான்கு விதமான வாய்ப்புகள் இருக்கும்.

இவற்றை பயன்படுத்து சமீபத்திய ஸ்டேட்டஸ்கள், ஏற்கெனவே பார்த்துவிட்ட ஸ்டேட்டஸ்கள், மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களைத் தனியாகப் பார்க்க முடியும்.

மீண்டும் அனைத்து ஸ்டேட்டஸ் பதிவுகளையும் ஒன்றாகப் பார்க்க All என்ற ஃபில்டரை பயன்படுத்தலாம்.

சாட்களில் பழைய மெசேஜ்களைத் தேதி வாரியாகத் தேடுவதற்கு பயன்படும் ஃபில்டர் குறித்த அறிவிப்பும் அண்மையில் வெளியானது.

அந்த அம்சம் மூலம் குறிப்பிட்ட திகதியில் பகிரப்பட்ட மெசேஜ்களை மட்டும் தேடும் வசதி கிடைக்கும். குழு உரையாடல்களுக்காக வட்ஸ் எப் புதிய வொய்ஸ் செட் (Voice chat) அம்சத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

குரூப் செட் அம்சமும், குரூப் வொய்ஸ் கோல் அம்சமும் ஏற்கெனவே உள்ள நிலையில், புதிய வொய்ஸ் செட் அம்சம் அதிக நபர்கள் அழைப்பில் பேச அனுமதிக்கிறது.

Recommended For You

About the Author: webeditor