அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு இடம்பெயரவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பதிவேற்றி அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்க – இலங்கை இடையிலான வரலாற்று தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,
“ பல தசாப்தங்கள் பழமையான எமது அலுவலகங்களில் இருந்தும், பல தசாப்தங்கள் பழமையான அமெரிக்க- இலங்கை வரலாறு பொதிந்த எமது புதிய தூதரக அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளோம். அதற்காக அனைவரும் கைகோர்த்துக்கொண்டோம்.
இது புதிய அனுபவமாக இருக்கும். விரைவில் எமது புதிய அலுவலத்திற்கு உங்களை வரவேற்க காத்திருக்கின்றோம்” என ஜூலி சுங்(Julie Chung) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.