கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான டைல்கள், பல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள், கலவை மேம்பாட்டுத் திட்டங்கள், முதலீட்டுச் சபையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களைத் தவிர அரசாங்கத் திட்டங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மூலப்பொருள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
எனினும், அத்தகைய பொருட்களை எந்த சூழ்நிலையிலும் மீண்டும் விற்பனை செய்ய இறக்குமதி செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு இறக்குமதியானது 180 நாட்களுக்கு வழங்கப்படும் கடன் பத்திரங்களுக்கு உட்பட்டது மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் அனுமதி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.