இத்தாலியில் பெருவெள்ளம்

இத்தாலி டஸ்கனி நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் 6 பேர் பலியானதை அடுத்து வசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அத்துடன் பெருவெள்ளத்தால் வீடுகள் முன் நிறுத்தி வைத்து இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.

மேல் மாடிகளில் மக்கள் தஞ்சம்
இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர். 2 பேரை காணவில்லை. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதோடு இத்தாலியின் வரலாற்று நகரமான புளோரன்ஸ் அருகே உள்ள கேம்பி பிசென்சியோவில் 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அங்கு நிலைமை மோசமாக உள்ளதால் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாள் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor