இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் நீக்கிய சீனா!

சீனாவின் முன்னணி நிறுவனமான பைடு மற்றும் அலிபாபா தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயரை சீனா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையை பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சமீப நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் பிரபல்யமான தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீன நிறுவங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை தொடர்பில் இதுவரையில் அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் எந்த பதிலும் வெளியிடவில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத சீனா, பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அளிப்பதே தீர்வு எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor