நாட்டில் இன்று இரவு நேரத்தில் பகுதி சந்திர கிரகணம் நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதி, பசிபிக், அத்திலாந்திக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அந்தாட்டிக்கா ஆகிய நாடுகளில் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்களை உள்ளடக்கிய இவ் வருடத்திற்கான கடைசி கிரகணம் இதுவாகும்.
சந்திர கிரகணம்
இன்றைய தினம் இரவு 11.32 மணிக்கு ஆரம்பமாகும் முதல் சந்திர கிரகணம் 29 ஆம் திகதி அதிகாலை 3.56 மணிக்கு நிறைவடையும்.
இந்தக் கிரகணம் 4 மணி 25 நிமிடங்கள் நிகழும். பூமியின் இருண்ட நிழல் சந்திரன் மீது விழுவது, நாளை அதிகாலை 1:05 மணிக்கு தொடங்கி 02:24 மணி வரை நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.