அமெரிக்காவில் உள்ள மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்த 23 வயதான ரிக்கி லின் லாப்லின் என்பவர் அப்பகுதியில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர், 16 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதேவேளை மாணவனின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். இவ்விவகாரம் பாடசாலை முழுவதும் பரவியது.
இது தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஆசிரியை தனக்கு அவரது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியதாகவும், ஆசிரியையிடம் தனது நிர்வாண படங்களை பரிமாறி கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஆசிரியையிடம் விசாரணை நடத்தியபோது மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். மேலும் அந்த மாணவன் மைனர் என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆசிரியையை பொலிஸார் கைது செய்தனர். அவர் மீது பாலியல் முயற்சி, குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருத்தல், சாட்சியை சேதப்படுத்துதல், சிறுவர்களுக்கு ஆபாச தகவல்களை அளித்தல் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யபப்ட்டுள்ளார்.