டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பிய சீனா!

சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் ரஷ்யாவின் உதவியுடன் கடந்த 2021ஆம் ஆண்டு டியான்காங் என்ற விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக விண்ணில் நிறுவியது.

முதற்கட்டமாக வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2 எப் என்ற ராக்கெட்டினை டியான்காங் நிலையத்திற்கு ஏவியுள்ளது.

ஷென்ஜோவ்-17 என்ற விண்கலத்தை சுமந்து செல்லும் இந்த ராக்கெட்டில் சீன விண்வெளி வீரர் டாங் ஹாங்போ (வயது 48) என்பவர் சீனாவின் லட்சிய திட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

முன்னாள் சீன விமானப்படை போர் விமானியான அவர் 6 மாதங்கள் டியான்காங் நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளார்.

அவருடன் இரண்டு இளம் வீரர்களான தெங் சென்ங்ஜி (33), ஜின்லின் (35) ஆகியோர் சென்றுள்ளனர். இருவருக்கும் இதுவே2 முதல் விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor