கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு அந்நாட்டு குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் (SEAN FRASER) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலர் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் என்பது குற்றிப்பிடத்தக்கது.
கடந்த ஜுலை மாத இறுதி வரையில் சுமார் 1.3 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்காக காலத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்ட கால தாமத நிலைமை இந்த ஆண்டு இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் ப்ரேசர் கடந்த ஜனவரி மாதம் உறுதிமொழி வழங்கியிருந்தார்.
உக்ரைன் போர் ஆரம்பமாவதற்கு முன்னதாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
தற்பொழுது பெரும் எண்ணிக்கையிலான உக்ரைனியர்கள் கனடாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்களை பரிசீலனைன செய்வதற்கு பயன்படுத்தப்படும் பழைய தொழில்நுட்பங்கள் இந்த கால தாமதத்திற்கு ஓர் ஏதுவாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நோக்கில் குடிவரவு திணைக்களம் புதிய பணியாளர்களை சேவையில் அமர்த்திக் கொண்டுள்ளதாகவும் விரைவில் இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.