இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தரம்ஷலாவில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக இந்தியா மட்டும் காணப்படுகிறது.
274 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்தியா அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தமை இந்த இலக்கை நோக்கி நகர இலகுவாக அமைந்தது. சுப்மன் கில், ரோஹித் ஷர்மா இணைந்து 71 ஓட்டங்களை பெற்றனர். ரோஹித் ஷர்மா அரைச்சதம் பூர்த்தி செய்ய முன்னர் ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் கில் ஆட்டமிழக்க ஷ்ரேயாஸ் ஐயர், விராத் கோலி ஜோடி அரைச்சத இணைப்பாடத்தை பூர்த்தி செய்த வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். தொடர்நது ராகுலன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை கோலி உயர்த்தினார். இருவரும் அரைச்சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்து சிறிது நேரத்தில் ராகுல் ஆட்டமிழந்தார்.
இந்த தொடரில் இன்றே இந்தியா அணி மூன்று விக்கெட்களுக்கு அதிகமாக இழந்தது. புதிதாக துடுப்பாட வந்த சூர்யகுமார் யாதவ் தேவையற்ற ரன் அவுட் ஆட்டமிழப்பு மூலம் நியூசிலாந்து பக்கமாக போட்டியின் போக்கு மாறியது. ஆனாலும் கோலி இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக துடுப்பாடினார்.
ரவீந்தர் ஜடேஜா, விராத் கோலி நிதானமாக துடுப்பாடி அரைச்சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்து வெற்றியை இலகுபடுத்தினர். இன்றும் விராத் கோலி அபாரமாக துடுப்பாடி இந்தியா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். சதம் பெறும் வாய்ப்பினை விராத் கோலி இறுதி நேரத்தில் சதமடிக்க முயற்சித்து 95 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
இந்தியா அணி 48 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தது. அதன் மூலமாக நியுசிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் ரச்சின் ரவீந்த்ர, டெரில் மிட்செல் ஆகியோர் இணைந்து மீட்டு எடுத்தனர்.
ரவீந்தர் ஜடேஜா தவறவிட்ட இலகுவான பிடி இந்த ஜோடிக்கு வாய்ப்பாக அமைந்தது. ரச்சின் 12 ஓட்டங்களை பெற்ற வேளையில் மொஹமட் ஷமியின் பதினோராவது ஓவர் பந்துவீச்சில் பிடி நழுவவிடப்பட்டது. இரண்டு தடவைகள் ரச்சின் ரவீந்திரவுக்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டு மீள் பரிசீலனை மூலம் அவர் தப்பித்துக் கொண்டார்.
விக்கெட் கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குல்தீப் யாதவின் 32.5 ஆவது ஓவரில் டெரில் மிற்செலின் பிடியை மொஹமட் ஷிராஜ் நழுவவிட்டார். இந்தப் பிடிகள் இரண்டும் இந்தியா அணிக்கு போட்டியில் தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும் 4 பந்துகளில் மொஹமட் ஷமி ரச்சினின் விக்கெட்டை கைப்பற்றி 149 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்தார். சிறிய இடைவெளியில் அணியின் தலைவர் ரொம் லெதாமின் விக்கெட் வீழ்த்தப்பட இந்தியா ஓரளவு கட்டுப்படுத்தியது. இருப்பினும் டெரில் மிற்செல் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை போராடி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக் கொடுத்தார்.
இந்தியா அணியின் இறுதி நேரப்பந்துவீச்சு நியுசிலாந்து அணியின் எதிர்பார்க்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையிலும் குறைவாக கட்டுப்படுத்த உதவியுள்ளது. அதுவே இந்தியா அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.
ரச்சின் ரவீந்திர தொடர்ச்சியான சிறந்த துடுப்பாட்டம் மூலம் யாரும் எதிர்பாராத நிலையில் பிரபலம் அடைந்துள்ளார்.
குல்தீப் யாதவின் பந்துவீச்சு அடித்து தாக்கப்பட மேலதிக பந்துவீச்சாளர் இல்லாமல் போனது இந்தியா அணிக்கு பின்னடைவாக போய்விட்டது என நினைத்தாலும் கூட அவர் மீள் வருகையை ஏற்படுத்தி சிறப்பாக பந்துவீசி நிறைவு செய்தார். இந்தியா அணி 5 பந்துவீச்சாளர்களை மாத்திரமே பாவித்தது.
நான்கு போட்டிகளின் பின்னர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மொஹமட் ஷமி அபாரமாக பந்துவீசி நியூசிலாந்து அணிக்கு தலையிடி வழங்கியுள்ளார். தனது இரண்டாவது ஐந்து விக்கெட் பெறுதியை பெற்றுக்கொண்டார்.
ஹார்டிக் பாண்டியாக்கு காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஷர்டூல் தாகூர் நீக்கப்பட்டு மொஹமட் ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். ஷமி இனி முழுமையாக தொடரும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. நியூசிலாந்து அணி மாற்றங்களின்றி விளையாடியது.
இரு அணிகளும் தலா 05 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இதன் காரணமாக அரை இறுதிப்போட்டிக்கு கிட்டத்தட்ட தெரிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடிய நிலையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரோஹித் ஷர்மா | Bowled | லூக்கி பெர்குசன் | 46 | 40 | 4 | 4 |
சுப்மன் கில் | பிடி – டெரில் மிட்செல் | லூக்கி பெர்குசன் | 26 | 31 | 5 | 0 |
விராத் கோலி | பிடி – கிளென் பிலிப்ஸ் | மட் ஹென்றி | 95 | 104 | 8 | 2 |
ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி- டெவோன் கொன்வே | டிரென்ட் போல்ட் | 33 | 29 | 6 | 0 |
லோகேஷ் ராகுல் | L.B.W | மிட்செல் சென்ட்னர் | 27 | 35 | 3 | 0 |
சூர்யகுமார் யாதவ் | Run Out | 02 | 04 | 0 | 0 | |
ரவீந்தர் ஜடேஜா | 39 | 44 | 3 | 1 | ||
மொஹமட் ஷமி | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 05 | |||||
ஓவர் 48 | விக்கெட் 06 | மொத்தம் | 274 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
டிரென்ட் போல்ட் | 10 | 00 | 60 | 01 |
மட் ஹென்றி | 09 | 00 | 55 | 01 |
மிட்செல் சென்ட்னர் | 10 | 00 | 37 | 01 |
லூக்கி பெர்குசன் | 08 | 00 | 63 | 02 |
ரச்சின் ரவீந்திரா | 09 | 00 | 46 | 00 |
கிளென் பிலிப்ஸ் | 02 | 00 | 12 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
டெவோன் கொன்வே | பிடி-ஷ்ரேயாஸ் ஐயர் | மொஹமட் சிராஜ் | 00 | 09 | 0 | 0 |
வில் ஜங் | Bowled | மொஹமட் ஷமி | 17 | 27 | 3 | 0 |
ரச்சின் ரவீந்திர | பிடி- சுப்மன் கில் | மொஹமட் ஷமி | 75 | 87 | 6 | 1 |
டெரில் மிட்செல் | பிடி – விராத் கோலி | மொஹமட் ஷமி | 130 | 127 | 9 | 5 |
ரொம் லெதாம் | L.B.W | குல்தீப் யாதவ் | 05 | 07 | 1 | 0 |
கிளென் பிலிப்ஸ் | பிடி – ரோஹித் ஷர்மா | குல்தீப் யாதவ் | 23 | 26 | 0 | 1 |
மார்க் சப்மன் | பிடி – விராத் கோலி | ஜஸ்பிரிட் பும்ரா | 06 | 08 | 0 | 0 |
மிட்செல் சென்ட்னர் | Bowled | மொஹமட் ஷமி | 01 | 02 | 0 | 0 |
மட் ஹென்றி | Bowled | மொஹமட் ஷமி | 00 | 01 | 0 | 0 |
லூக்கி பெர்குசன் | Run Out | 01 | 05 | 0 | 0 | |
டிரென்ட் போல்ட் | 01 | 00 | 0 | 0 | ||
உதிரிகள் | 10 | |||||
ஓவர் 50 | விக்கெட் 10 | மொத்தம் | 273 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட் | விக் |
ஜஸ்பிரிட் பும்ரா | 10 | 01 | 45 | 01 |
மொஹமட் சிராஜ் | 10 | 01 | 45 | 01 |
மொஹமட் ஷமி | 10 | 00 | 54 | 05 |
ரவீந்தர் ஜடேஜா | 10 | 00 | 48 | 00 |
குல்தீப் யாதவ் | 10 | 00 | 73 | 02 |
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
இந்தியா | 05 | 05 | 00 | 00 | 10 | 1.353 |
நியூசிலாந்து | 05 | 04 | 01 | 00 | 08 | 1.481 |
தென்னாபிரிக்கா | 04 | 02 | 01 | 00 | 06 | 2.212 |
அவுஸ்திரேலியா | 04 | 02 | 02 | 00 | 04 | -0.193 |
பாகிஸ்தான் | 04 | 02 | 02 | 00 | 04 | -0.456 |
பங்களாதேஷ் | 04 | 01 | 03 | 00 | 02 | -0.784 |
நெதர்லாந்து | 04 | 01 | 03 | 00 | 02 | -0.790 |
இலங்கை | 04 | 01 | 03 | 00 | 00 | -1.048 |
இங்கிலாந்து | 04 | 01 | 02 | 00 | 02 | -1.248 |
ஆப்கானிஸ்தான் | 04 | 01 | 03 | 00 | 02 | -1.250 |
அணி விபரம்
நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி