வட்சப் பயனாளர்களுக்கான செய்தி

வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். கைத்தொலைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வசதி முதற்கட்டமாக அன்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வசதியின் பயன்கள்:

முன்னதாக ஒருவர் இரண்டு கைத்தொலைபேசிகளில் எண்கள் வைத்திருந்தால் தனி தனியாக இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்த வேண்டி இருந்தது.

எனினும், தற்போது இந்த புதிய வசதியின் மூலம் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

மேலும், சில சாதனங்களில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருந்ததால் பயனர்கள் பல இன்னல்களை சந்தித்தனர்.

ஒரு சிலர் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த அப்டேட் மூலம் அவர்களின் சிக்கல் தீர்ந்துள்ளது.

இந்த வசதியை வாட்ஸ்அப் அமைப்புகளில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்திற்கு நேராக உள்ள அம்புக்குறியை கிளிக் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor