கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடத்திய முத்தமிழ் விழா 19.10.2023 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ. குமாரசாமி அரங்கில் இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

துணுக்காய் வலய அழகியல் கல்வி உதவி கல்வி பணிப்பாளர் நாகரட்ணம் இராஜன் சிறப்பு விருந்தினராகவும் ழகரம் அறக்கட்டளை பொ. பிரசாந்தன் குடத்தனை அ த க பாடசாலை ஆசிரியை பாரத் வீணாவாஹினி ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

    

நிகழ்வில் தொடக்கவுரையை
முத்தமிழ் மன்ற காப்பாளர் விரிவுரையாளர் கவிஞர் வேல் நந்தகுமாரும் அரங்கத் திறப்புரையை சங்கீத பூஷணம் கே.எஸ். சிவஞானராஜாவும் நிகழ்த்தினர்.

முத்தமிழ் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு மற்றும் ஆசிரிய மாணவர்களின் நடனம் வில்லிசை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

கலாசாலை நூற்றாண்டு விழாவையொட்டி கலாசாலையின் 98/99 கல்வியாண்டு அணியினரின் ஆதரவில் வெளியிடப்பட்ட 25 ரூபாய் பெறுமதியான முத்திரை மற்றும் அஞ்சல் உறை தொடர்பாக வடமாகாண அஞ்சல் அத்தியட்சகர் மதுமதி வசந்தகுமார் ஓவியரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய நா. இராஜன் கோப்பாய் அஞ்சலக அதிபர் முத்திரை வெளியீட்டு இணைப்பு விரிவுரையாளர் வே. சேந்தன் கலாசாலை அதிபர் ச.லலீசன் ஆகியோர் 98/99 ஆசிரிய மாணவர் அணியினரால் கௌரவிக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN