உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்த எலோன் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.
இப்புதிய இணையதள ஒழுங்குமுறை சட்டம் காரணமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் எக்ஸ் செயலியின் இருப்பை அகற்றுவது அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனர்களைத் தடுப்பது குறித்து எலோன் மஸ்க் ஆலோசனை நடத்தி வருவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.