முதலிடத்தை தனதாக்கிய நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது.

இந்தியா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குழு நிலைப்போட்டிகளின் நான்காம் கட்டம் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

289 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி பெரியளவில் கூறுமளவுக்கு பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு கலவையாக பந்துவீசி விக்கெட்களை தகர்த்து ஆப்கானிஸ்தான் அணியை தடுமாற வைத்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

நியூசிலாந்து ஆரம்ப விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. வில் ஜங், ரச்சின் ரவீந்திரா 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு அணியின் ஓட்ட எண்ணிக்கையை சிறிதளவு உயர்திக்கொடுத்தனர்.

ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்ததை தொடர்ந்து அடுத்த இரு விக்கெட்களும் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. க்ளன் பிலிப்ஸ், டொம் லெதாம் ஆகியோர் நிதானமாக துடுப்பாடி 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்துகொண்டனர். இதன் மூலமாக நியூசிலாந்து அணி பலமான நிலைக்கு சென்றது.

ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வெற்றி பெற்ற நிலையிலில் இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு அச்சுறுத்தல் வழங்குமென எதிர்பார்க்கப்பட்து. ஆனால் அது தலைக்கீழாக மாறிப்போனது. நியூசிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 1 வெற்றியினை தனதாக்கியுள்ளது.

வீரர் ஆட்டமிழப்பு பந்துவீச்சாளர் 4 6
ரஹ்மனுல்லா குர்பாஸ் Bowled மட் ஹென்றி 11 21 0 1
இப்ராஹிம் ஷர்டான் பிடி –மிட்செல் சென்ட்னர் டிரென்ட் போல்ட் 14 15 2 0
ரஹ்மத் ஷா பிடி –ரச்சின் ரவீந்திர ரச்சின் ரவீந்திர 36 62 1 0
ஹஷ்மதுல்லா ஷஹிதி பிடி –மிட்செல் சென்ட்னர் லொக்கி பெர்குசன் 08 29 1 0
அஸ்மதுல்லா ஓமர்சாய் பிடி – ரொம் லெதாம் டிரென்ட் போல்ட் 27 32 2 0
இக்ரம்  அலிகில்
மொஹமட் நபி Bowled மிட்செல் சென்ட்னர் 07 09 1 0
ரஷீட் கான் பிடி – டெரில் மிட்செல் லொக்கி பெர்குசன் 08 13 0 1
முஜீப் உர் ரஹ்மான் பிடி – வில் ஜங் லொக்கி பெர்குசன் 04 03 1 0
நவீன் உல் ஹக் பிடி – மார்க் சப்மன் மிட்செல் சென்ட்னர் 00 01 0 0
பஷால்ஹக் பரூக்கி பிடி – டெரில் மிட்செல் மிட்செல் சென்ட்னர் 00 02 0 0
உதிரிகள் 05
ஓவர்  34.4 விக்கெட்  10 மொத்தம் 139
பந்துவீச்சாளர் ஓ. ஓட்ட விக்
டிரென்ட் போல்ட் 07 01 18 01
மட் ஹென்றி 05 02 16 01
மிட்செல் சென்ட்னர் 7.4 00 39 03
லொக்கி பெர்குசன் 07 01 19 03
கிளென் பிலிப்ஸ் 03 00 13 00
ரச்சின் ரவீந்திர 05 00 34 01
வீரர் ஆட்டமிழப்பு பந்துவீச்சாளர் 4 6
டெவோன் கொன்வே L.B.W முஜீப் உர் ரஹ்மான் 20 18 3 0
வில் ஜங் பிடி – இக்ரம் அலிகில் அஸ்மதுல்லா ஓமர்சாய் 54 64 4 3
ரச்சின் ரவீந்திர BOWLED அஸ்மதுல்லா ஓமர்சாய் 32 41 2 1
டெரில் மிட்செல் பிடி – இப்ராஹிம் ஷர்டான் ரஷீட் கான் 01 07 0 0
ரொம் லதாம் BOWLED நவீன் உல் ஹக் 68 74 3 2
கிளென் பிலிப்ஸ் பிடி – ரஷீட் கான் நவீன் உல் ஹக் 71 80 4 4
மார்க் சப்மன் 25 12 2 1
மிட்செல் சென்ட்னர் 07 05 1 0
உதிரிகள் 10
ஓவர்  50 விக்கெட்  06 மொத்தம் 288
பந்துவீச்சாளர் ஓ. ஓட் விக்
முஜீப் உர் ரஹ்மான் 10 00 57 01
பஷால்ஹக் பரூக்கி 07 01 39 00
நவீன் உல் ஹக் 08 00 48 02
மொஹமட் நபி 08 01 41 01
ரஷீட் கான் 10 00 43 01
அஸ்மதுல்லா ஓமர்சாய் 06 00 36 02
அணி போ வெ தோ ச/ கை பு ஓட்ட சராசரி வேகம்
நியூசிலாந்து 04 04 00 00 08 1.923
இந்தியா 03 03 00 00 06 1.841
தென்னாபிரிக்கா 03 02 01 00 04 1.385
பாகிஸ்தான் 03 02 01 00 04 -0.137
இங்கிலாந்து 03 01 02 00 02 -0.084
பங்களாதேஷ் 03 01 02 00 02 -0.699
அவுஸ்திரேலியா 03 01 02 00 02 -0.734
நெதர்லாந்து 03 01 02 00 02 -0.993
ஆப்கானிஸ்தான் 03 01 03 00 02 -1.250
இலங்கை 03 00 03 00 00 -1.532

 

 

Recommended For You

About the Author: admin