கனடாவில் கூடுதல் சம்பளம் பெறுபவர்கள் யார் யார் தெரியுமா?

கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை பேசக்கூடியவர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டுக்கான புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்களின் சராசரி சம்பளம் 60650 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது ஆங்கில மொழி மட்டும் பேசுபவர்களின் சம்பளத்தை விடவும் 10 வீதம் அதிகம் எனவும், பிரெஞ்சு மொழியை மட்டும் பேசுபவர்களை விடவும் 40 வீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆங்கில மொழி மட்டும் பேசுபவர்கள் சராசரியாக 55250 டொலர்களையும், பிரெஞ்சு மொழி மட்டும் பேசுபவர்கள் 43040 டொலர்களையும் சம்பளமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

கனடாவின் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் இடையில் சம்பள இடைவெளி வித்தியாசப்படுவதாக புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் புலனாகின்றது.

றொரன்டோவில் ஆங்கிலம் மட்டும் பேசும் பணியாளர்கள் சராசரியாக 59600 டொலர்களையும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பணியாளர்கள் சராசரியாக 78400 டொலர்களையும் சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்

Recommended For You

About the Author: webeditor