மீண்டும் விளையாடவரும் தனுஷ்க குணதிலக

பாலியல் வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுயாதீன விசாரணை
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்த ‘சுயாதீன விசாரணைக் குழு’வின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அவுஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதி​லக பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நவம்பர் 2022 இல் தனுஷ்கவுக்கு எதிராக இந்த கிரிக்கெட் தடையை விதித்தது.

எனினும், அவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அணமியில் நாடு திரும்பிய நிலையில், மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor