மாத்தறையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் மின்சார வாரியம் தமக்கு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாத்தறை துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும், தெனியாய மற்றும் பெலியத்த மின்சார உப நிலையங்களுக்கு மாற்று நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
CEB has informed me that if the water levels continue to rise in the area around the Matara grid sub station, as a safety precaution the power will be disconnected from the Matara grid sub station & power to the affected areas in Matara will be reconnected shortly after from the…
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 7, 2023