இலங்கையில் கால் பதித்த கொலைகார போதைப்பொருள்!

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ள அதேவேளை, இதனால் பாதிக்கப்பட்ட இலங்கை யுவதி ஒருவரின் காணொளி ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதோடு Zombie Drugs ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் ஹோமியோபதி வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்திருந்தார். அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உலக பெரு நகரங்களில் Zombie Drugs
‘Zombie Drugs’ என்பது விலங்குகளை அமைதிப்படுத்த, கட்டுப்படுத்த, மிருக வைத்தியர்களால் பாவிக்கப்படும் Tranqulizer வகை மருந்துகளை அதிக செறிவில், சட்டவிரோதமாக, ஏனைய போதைப் பொருட்களுடன் கலந்து இந்த Zombie Drug தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

‘Zombie Drugs’ நியூயோர்க், பிலடெல்பியா, லிவர்பூல், லண்டன் போன்ற உலக பெரு நகரங்கள் இப்போது இந்த zombie வகை போதைப் பொருள் பாவனையால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி வருகின்றன.

எதிர்கால சந்ததியினர் நிலை என்ன?
அதிலும் குறிப்பாக இள்ம் பராயத்தினர் இதற்கு அடிமையாவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்கால சந்ததியினர் என்பதால் இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த zombie வகை ட்ராக்ஸ்களின் பாவனையால், குறுகிய காலத்திலயே உடல் தசைகளை சிதைத்து விடும். காலப்போக்கில் தசை நார்கள் பலமிழந்து, உடல் இயக்கம் தடைப்பட்டு, சமநிலை இல்லாமல் போகும். தள்ளாடிய நடை வரும்.இந்த போதைப் பாவனைகளுக்கு எதிராக தொழிற்படும் , மீட்டெடுக்கும் எந்த மருந்துகளும் தற்போது பாவனையில் இல்லை.

இதனால், இவ்வாறான சொம்பிக்கள் அதிக போதையினால் உயிரிழப்பை உடனடியாக சந்திக்க வேண்டி ஏற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது ‘Zombie Drugs’ அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் பெரும் சவாலாகவே இது மாறியுள்ள நிலையில், நமது நாட்டில்நிலை என்னவென சிந்தித்து பார்க்கவேண்டும் எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor