கடும் மழையால் வான் கதவுகள் திறக்கலாம்

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கமான மவுசாகல மற்றும் காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது.

குறிப்பாக மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதுடன் இன்னும் ஒரு சில அடிகள் நிறைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்வு
காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதுடன், கென்யோன், லக்சபான, நவலக்சபான, விமலசுரேந்திர, கலுகல, பொல்பிட்டிய ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மத்திய மலைநாட்டில் மழை பெய்யும் பட்சத்தில் சகல நீர் தேக்கங்களும் நீர் நிரம்பிய நிலையில் வான் கதவுகள் எந்த நேரத்திலும் திறந்து விட வாய்ப்பு உள்ளது.

எனவே தாழ் நிலப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், கரையோர பகுதியில் உள்ள மக்கள் சற்று பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor