இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார்.
அதன்படி தனுஷ்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ்க குணதிலக்க, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர்
பின்னர் அவர் அவுஸ்திரேலியானவின் டே ஸ்ட்ரீட் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் பல மாதங்களாக விசாரணைகளின் பின்னர், தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் நிரூபித்த நிலையில், அவர் நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.