பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிற்கு கூட சாப்பிட போகலாம் என்று பழமொழி கூறுவது உண்டு.
அந்த வகையில் எந்த உணவு சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்வதற்கு மிளகு உதவி செய்கிறது.
சளித்தொல்லை இருந்தால் மிளகு அதை உடனே தீர்க்கும் என்பதும் மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி உடனே தீரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி குணமாகும் என்றும் ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் துளசியை சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிட்டால் பசியின்மை நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது