பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜிவந்த மற்றும் பூஜ்ய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வருத்தம் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான சிறப்புப் பிரதிநிதியான மேரி லொல்லர் தனது டுவிட்டர் கணக்கில் ஒரு குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்களான குறித்த மூவரும் கைது செய்யப்பட்டமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் தொடர்பான தடுப்பு உத்தரவுகளில் கையொப்பமிட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வசந்த முதலிகே மற்றும் கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பான விசாரணைகள் இன்று முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.